News Just In

4/27/2023 10:54:00 AM

புலமை பரிசில் பரீட்சையில் சித்திடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு




எஸ்.எம்.எம்.முர்ஷித்

இலங்கை வங்கி நாடளாவிய ரீதியில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தமது வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வை வருடா வருடம் நடாத்தி வகின்றது.

அந்த வகையில் 2021ம் ஆண்டு புலமை பரிசில் பரீடசையில் சித்தியடைந்த வாடிக்கையாளர்களான ஏழு மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இலங்கை வங்கி வாழைச்சேனை கிளையில் இடம் பெற்றது.

வங்கி முகாமையாளர் ராஜகோபால் பிரேமசந்திரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பாலசுப்ரமணியம் பிரதீபன் கலந்து கொண்டதுடன் கற்பித்த ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும், வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை வங்கி நாடளாவிய ரீதியில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற இரண்டாயிரம் மாணவர்களுக்கு பதினையாயிரம் ரூபா பணமும் பதக்கமும் சான்றிதழும் அன்பளிப்பும் வழங்குவதோடு சேமிப்பு கணக்கு வைத்து பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் சான்றிதழும் அன்பளிபபும் வழங்கப்படும்.

அதன் அடிப்படையில்; வாழைச்சேனை இலங்கை வங்கி கிளையில் நான்கு மாணவர்களுக்கு பதினையாயிரம் ருபா பணமும் வைப்பில் வைக்கப்பட்டதோடு பதக்கம் அணிவித்ததோடு சான்றிதழும் அன்பளிப்பும் வழங்கப்பட்டதோடு மூன்று மாணவர்களுக்கு சான்றிதழும் அன்பளிப்பும் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டன.


No comments: