News Just In

4/28/2023 11:33:00 AM

இந்த நாட்டிலுள்ள காணிகள் வெளிநாடுகளுக்கா சொந்தம் ? காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணி கேள்வி



 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இந்த நாட்டிலுள்ள காணிகள் துறைமுகங்கள் நகரங்கள் வெளிநாடுகளுக்கா சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளதாக காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியின் செயற்பாட்டாளர் பிரியங்கர கொஸ்ற்ரா கேள்வி எழுப்பினார்.

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவும் காணிப் பிர்ச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை நாடிச் செல்லும் செயல் திட்டத்தின் தொடர்ச்சியாக திருகோணமலையிலுள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலையில் காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்ளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு புதன்கிழமை 26.04.2023 இடம்பெற்றது.

காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரியங்கர கொஸ்ற்ரா,

இந்த விழிப்புணர்வின் நோக்கம் இதுவரை எவ்வாறான காணிப் பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை எவ்வாறு அணுகலாம். குழுவாக எப்படிச் செயற்படுவது. தீர்ப்பதற்காக தனித்து இயங்க முடியாது போன்றவற்றைக் கண்டறிவதாகும்.

பல்வேறு பகுதிகளிலும் காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடியதன் விளைவாக சில விடயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

அதில் மிக முக்கியமாக, காணிப் பிரச்சினை என்பது இலங்கையில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமோ என்றில்லை. அது பரவலாகக் நாடு முழுக்க உள்ள பிரதான பிரச்சினையாகக் காணபபடுகின்றது.

இரண்டாவதாக நாங்கள் ஆய்வுகளில் கண்ட விடயம் மக்களிடம் காணி தொடர்பான போதியளவு விழிப்புணர்வு இல்லை. அதாவது தனியார் காணிகள் என்றால் அந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுக வேண்டும் அரச காணிகளை எவ்வாறு அணுக வேண்டும் என்ற விவரங்கள் தெரியாதவர்காளக மக்கள் உள்ளார்கள்.

மேலும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை முன்கொண்டு செல்வதற்கு கூட்டாக இயங்குவதில்லை என்பதும் குறைபாடாகக்கண்டறிய்பட்டுள்ளது. மக்களிடம் ஒற்றுமை இல்லை என்பதும் பெரிய பலவீனமாக உள்ளது.

இவை எல்லலாவ்றையும் எதிர்கொண்டு ஒரு சில மக்கள் தங்கள் காணிப் பிர்ச்சினைகளுக்குத தீர்வைக் காண முயலும்போது அந்தக் காணிப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தனியாரோ அல்லது அரச நிருவாகத் தரப்போ தரும் மறைமுக அழுத்தங்களும் நெருக்கடிகளும் கூட மக்களின் காணிப்பிரச்சினைளைத் தீர்ப்பதில் ஒரு சவாலாக இருந்து வருகின்றது.

நாட்டை கூறு போட்டு விற்பதற்குத்தான் எல்லோரும் முயற்சிக்கிறார்கள். இந்த நாட்டின் காணிகளை ஆண்டனுபவிக்க இந்த நாட்டு மக்களான எமக்கு உரிமை இல்லையா?

திருகோணமலை இயற்கைத் துறைமுகம் யாருக்கு? ஹம்பாந்தோட்டை துறைமுகம் யாருக்கு, கொழும்பு துறைமுக நகர் யாருக்கு அவை இந்த நாட்டு மக்களுக்கு உரிமை இல்லாத ஒன்றா?

இலங்கையின் காணிகள் வெளிநாடுகளின் காணி வியாபாரப் பொருளாக மாறியுள்ளது.

ஆட்சியாளர்கள் காணியை தங்களது விற்பனைப் பொருளாகத்தான் பார்த்து வந்துள்ளார்கள்.

இந்நிகழ்வில் காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியின் செயற்பாட்டாளர் உட்பட கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின சமூக செயற்பாட்டாளர்களும் பயனாளிகளான காணிப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.


No comments: