News Just In

3/01/2023 06:51:00 AM

மார்ச் மாதம் டெக்டோனிக் தகடுகளில் பாரிய நடுக்கம் ஏற்படக்கூடும்! மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கணிப்பு!





நிலநடுக்கங்கள் குறித்த நெதர்லாந்து விஞ்ஞானியின் கணிப்பு உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் துருக்கி, சிரியாவில் மூன்று நாட்களுக்கு முன்பே நிலநடுக்கம் ஏற்படும் என்பதினை கணித்த விஞ்ஞானி மார்ச் முதல் வாரத்தில் நில அதிர்வு அதிகரிக்கும் என்று எச்சரித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில், பூமியின் டெக்டோனிக் தகடுகளின் வலுவான இயக்கங்கள் ஏற்படக்கூடும் என ஈராக்கில் உள்ள பாக்தாத் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஒருவரும் கணிப்பினை வெளியிட்டுள்ளார்.

பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையே சந்திரன் வரும்போது டெக்டோனிக் தகடுகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு, பூமியின் சுழற்சி வேகத்தில் தாமதம் ஏற்பட்டது.இது துருக்கியில் தட்டுகளின் இயக்கத்திற்கு வழிவகுத்தது, இதன் விளைவாக தவிர்க்க முடியாத பேரழிவு ஏற்பட்டது.
எச்சரிக்கை நிலை தேவை

மக்கள் மத்தியில் பயத்தை பரப்ப விரும்பவில்லை, ஆனால் ஒரு ஆபத்தான மாற்றம் தெளிவாக உள்ளது, அதற்கு எச்சரிக்கை தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மார்ச் 2,4, 5 ஆகிய திகதிகளில் பெரிய கிரக, சந்திர சஞ்சாரம் உள்ளது. எனவே மார்ச் முதல் வாரத்தில் பூகம்பங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் சில வலுவான நில அதிர்வு நிகழ்வுகளை காணலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, துருக்கிய - சிரிய எல்லையில் நிலநடுக்கத்தை முதலில் கணித்த நெதர்லாந்து விஞ்ஞானி இதே கருத்தை தெரிவித்த நிலையில் கிரக நிலைகளின் அடிப்படையில் பூகம்பங்களை கணிப்பது பூகம்பங்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுக்கு முரணானது என்றும் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.







No comments: