News Just In

3/30/2023 07:47:00 AM

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ள வாகனங்கள்! வழங்கப்பட்டுள்ள காலக்கெடு!

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான வாகனப் புகைப் பரிசோதனையில் தேர்ச்சி பெறாத பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன ஏர் டேட்டா திட்டத்தின் பணிப்பாளர் தசுன் ஜானக இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான வாகனப் புகைப் பரிசோதனையில் தேர்ச்சி பெறாத பல வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் கறுப்பு புகை வெளியேற்றத்தை ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் சரிசெய்யாத பட்சத்தில் அந்த வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளன.

பெப்ரவரி 1, 2023 முதல், ஹோமாகம, கொட்டாவ, பண்டாரகம, அளுத்கம, மத்துகம, பேருவளை, குணசிங்கபுர மற்றும் பாஸ்டியன் மாவத்தை ஆகிய இடங்களில் திடீர் வாகன புகைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மேல் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய இத் திட்டத்தில் 1,127 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதன்போது கரும்புகை வெளியிட்ட 403 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.”என தெரிவித்துள்ளார்.


No comments: