News Just In

3/14/2023 07:54:00 AM

கல்வி மேம்பாட்டு ஆலோசனை கலந்துரையாடலும், சந்துமா வழங்கும் நிகழ்வும்!!

மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கம் - BUDS (UK) அமைப்பின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் இலவசமாக நடாத்தப்படும் மாலை நேர வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பான பெற்றோர்களுடனான ஆலோசனைக் கலந்துரையாடலும், சந்துமா வழங்கிவைக்கும் நிகழ்வும் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் இடம்பெற்றது.

BUDS (UK) அமைப்பின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு இலவசமாக நடாத்தப்பட்டுவரும் மாலை நேர வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்றகரமான செயற்பாடுகள் மற்றும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு பெற்றோரினால் வழங்கப்பட வேண்டிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாக இதன்போது பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதுடன், அப்பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணித்தாய்மார்கள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உட்பட 200 பேருக்கு இதன்போது சத்துமா வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் BUDS (UK) அமைப்பின் பிரதிநிதி ரீ.சுந்தரராஜா, மட்டக்களப்பு மக்கள் வங்கி முகாமையாளர் டினேஸ்குமார், ஓய்வுநிலை பொறியியலாளர் சர்வானந்தா, ஓய்வுநிலை அதிபர் தங்கவேல், சமூக செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களுமான உ.உதயகாந்த் (JP), நடனசபேசன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்ததுடன், சத்துமா பொதிகளையும் வழங்கியுள்ளனர்.

No comments: