News Just In

3/28/2023 12:17:00 PM

சவேந்திர சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!





முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவப் பிரதானியாக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மீது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தியில் இருப்பதால் அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் பிரதான கட்சி என்ற வகையில் பொதுஜன பெரமுன விசேட கலந்துரையாடலை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கும் வகையில் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: