News Just In

3/02/2023 01:43:00 PM

சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களிடம் அமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள்




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இலங்கையில் முன்னெடுக்கப்படும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களிடம் அமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட்ட சந்திப்பில், அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சரின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், ஐநா உலக உணவு விவசாய ஸ்தாபனம், ஐநா சுற்றுச் சூழல் நிகழ்ச்சித் திட்டம் உட்பட இன்னும் பல சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நஸீர் அஹமட்,

சுற்றாடல் திட்டங்களுக்கான நிதியைப் பெறும் இலக்குகளை நோக்கி இலங்கை நகர வேண்டியுள்ளது. இது குறித்து அதிக கவனம் செலுத்துவதுடன், பயிற்சியிலும் ஈடுபடுவது அவசியம். இதனால், கிடைக்கும் அனுபவங்கள், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள சுற்றாடல் திட்டங்களுக்கு பலம் சேர்க்கும்.

சுற்றாடலை அபிவிருத்தி செய்வதற்கான உண்மையான இலக்குகளை கண்டறிவதுதான் இச்செயற்றிட்டத்தின் பிரதானமாகும். இதனால், தேவையான நிதிகள், இச்செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.” என்றார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற சுற்றாடலை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பங்காளர்கள் தங்களது அனுபவங்கள், இத்திட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்தனர். இதைக் கவனத்தில் கொண்ட அமைச்சர், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நடத்தப்படும் கூட்டங்களில் அவசியம் கலந்து கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார். மேலும், இவ்வாறான திட்டங்களுக்கு உதவிய


No comments: