News Just In

3/21/2023 01:18:00 PM

இருபதாவது ஆண்டு நிறைவும், முதலாவது வது பட்டமளிப்பு விழாவும்




அபு அலா
கிழக்கு மாகாண புல்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள அன்வாருள் உழும் அரபிக் கல்லூரியின் 20வது ஆண்டு நிறைவும், முதலாவது அல் ஹாபிழ், அல் ஆலிம் மற்றும் ஆலிமாக்களுக்கான மாபெரும் பட்டமளிப்பு விழா (18) குறித்த அரபிக் கல்லூரியின் வளாகத்தில் இடம்பெற்றது.கல்லூரியின் நிர்வாக சபைத் தலைவர் அல் ஹாபிழ், அல் ஆலிம், அல் ஹாரி ஏ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ் ஷேஹ் அல் ஆலிம் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி பிரதம அதிதியாகவும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உபதலைவர் அஷ் ஷேஹ் அல் ஆலிம் எம்.எச்.எம்.உமர்தீன் ரஹ்மான் விஷேட அதிதியாகவும், கண்டி முர்த்தலாவ மழாஹிருள் அரபிக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ் ஷேஹ் அல் ஆலிம் எஸ்.எல்.எம்.ரபியுதீன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அன்வாருள் உழும் ஆண்கள் அரபிக் கல்லூரி மற்றும் தாஜூனிஸா பெண்கள் அரபிக் கல்லூரியிலிருந்து முதலாவது முறையாக அல் ஹாபிழ், அல் ஆலிம் மற்றும் ஆலிமாக்கள் பட்டங்களை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான 11 அல் ஹாபிழ்களும், 10 அல் ஆலிம்களும், 14 ஆலிமாக்களுக்குமான பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அன்வாருள் உழும் ஆண்கள் அரபிக் கல்லூரி மற்றும் தாஜூனிஸா பெண்கள் அரபிக் கல்லூரியின் அதிபர் அல் ஆலிம் எம்.எஸ்.அன்வர்தீன் (மழாஹிரி), குறித்த அரபிக் கல்லூரிகளின் உப அதிபரும், உப தலைவருமான அஷ் ஷேஹ் அல் ஆலிம் என்.எச்.எம்.யாசீர் (ரஷாதி) மற்றும் கல்லூரியின் அல் ஆலிம்கள், உலமாக்கள், மார்க்க அறிஞசர்கள், பெற்றோர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ் ஷேஹ் அல் ஆலிம் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உபதலைவர் அஷ் ஷேஹ் அல் ஆலிம் எம்.எச்.எம்.உமர்தீன் ரஹ்மான், கண்டி முர்த்தலாவ மழாஹிருள் அரபிக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ் ஷேஹ் அல் ஆலிம் எஸ்.எல்.எம்.ரபியுதீன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

--


No comments: