News Just In

3/04/2023 08:29:00 AM

கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு: பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ?

நாட்டின் பிரதமர் பதவிக்கு மீண்டுன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) நியமிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் மீண்டும் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கு இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மஹிந்தவிற்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இந்த சந்திப்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இல்லை, தினேஷ் பிரதமர் பதவியை சிறந்த முறையில் செய்கின்றார். அதனால், அந்த பதவியை எனக்கு எடுப்பதற்கான தேவை கிடையாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துவோர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளதாக அறிய முடிகின்றது.

அவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கு நியாமிக்கப்படும் பட்சத்தில், அரசியல் தொலைநோக்கு கொண்ட, அரசியலில் இல்லாத ஒருவரை, அவரின் ஆலோசகராக நியமிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி செயலாளர்களான லலித் வீரதுங்க, காமினி செனரத் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எனினும், பிரதமர் பதவியில் தொடர்ந்தும் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மஹிந்த ராஜபக்ஸ இருப்பதாக அறிய முடிகின்றது.

No comments: