News Just In

3/12/2023 07:52:00 PM

இலங்கையில் வாகனங்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு!

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் வாகனங்களின் விலை குறையாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிடின் வாகன விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் என அதன் தலைவர் இந்திக்க சம்பத் சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.

பயன்படுத்திய சில வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments: