News Just In

3/10/2023 05:52:00 PM

மின்சக்தி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக தாமதமாகியுள்ள சுமார் 36,000 புதிய இணைப்புகளை ஆறு வாரங்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது, ​​ஆறு வாரங்களுக்குள் புதிய இணைப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக புதிய இணைப்புகளை வழங்குவதற்கு உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரித்ததால் நிதிமூலம் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய இணைப்புகளை வழங்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய இணைப்புகளைப் பெறுவதற்கு பெருமளவிலான மக்கள் பதிவுசெய்துள்ள போதிலும் இணைப்புகளை வழங்குவதில் பாரிய காலதாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பு மூலம் 36, 000 குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செலவுகளை குறைக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

No comments: