சதொச வர்த்தக நிலையத்தில் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் வத்தேகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடவளை பிரதேசத்தில் உள்ள சதொச விற்பனை நிலையமொன்றில் இருந்து 1900 ரூபா பெறுமதியான பொருட்களை திருடியதாக முறைப்பாட்டின் பேரில் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நாள் இந்த விற்பனை நிலையத்திற்கு வந்த கான்ஸ்டபிள் பொருட்களை பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பணம் கொடுக்காமல் தப்பிச் சென்றதாக முகாமையாளர் வத்தேகம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கான்ஸ்டபிளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
No comments: