நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவத் தலைவர்கள் தினமும் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் பாடசாலை முன்றலில் பாடசாலை ஒழுக்காற்றுக் குழு பொறுப்பாசிரியர் ஏ.எல்.எம். றிபாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரியுமான என்.எம்.ஏ. மலீக் கலந்து கொண்டார். மேலும் கெளரவ அதிதியாக ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளரும், இப்பாடசாலையின் முன்னாள் அதிபருமான எம்.ஐ.அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை அணிவித்த அதிதிகள் மாணவ தலைவர்கள் ஒரு பாடசாலையில் எவ்வாறான பங்குகளை வகிக்கின்றனர் என்பது பற்றியும், தலைமைத்துவ பண்புகள் பற்றியும், மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான விடயங்கள் தொடர்பிலும் உரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: