நகல் பிரதி( Photo copy) ஒன்றின் விலையை அதிகரிக்க அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக இவ்வாறு நகல் பிரதியின் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நகல் பிரதி ஒன்றின் விலை 5ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், காகிதம் மற்றும் புதிய இயந்திரங்களின் விலை அதிகரிப்பும் இதற்கு காரணம் என்று சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளர்.
இதன்படி, ஏ4 அளவு நகல் பிரதி 15 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டையின் நகல் பிரதி 10 ரூபாவில் இருந்து 15 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அச்சுப் பிரதிகள்(printout) வழங்குவதற்கான கட்டணமும் கறுப்பு வெள்ளைப் பிரதி 5 ரூபாவாலும் வண்ணப் பிரதியொன்றுக்கு 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments: