News Just In

2/20/2023 01:03:00 PM

பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் தங்களது குரலை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆங்கிலக் கல்வி அவசியம்




- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சிறுபான்மையினர் தங்களது குரலை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆங்கிலக் கல்வி அவசியம் என ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கென்ற் ஆங்கிலக் கல்வி நிலையத்தின் பணிப்பாளருமான அனீஸா பிர்தௌஸ் தெரிவித்தார்.

கென்ற் ஆங்கிலக் கல்வி நிலையத்தின் கல்விச் செயற்பாடுகளில் சிறந்த அடைவைப் பெற்ற 273 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் 13வது வருடாந்த நிகழ்வு காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஞாயிறன்று 19.02.2023 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர், காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எம்.எம். கலாவுதீன், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் முன்னாள் தலைவர் எம்.ஐ.எம். நவாஸ் உட்பட இன்னும் பல கல்வியியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கென்ற் ஆங்கிலக் கல்வி நிலையத்தின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்குத் தலைமையேற்று மேலும் உரையாற்றிய பணிப்பாளர் அனீஸா, ஆங்கிலத்தைக் கற்பது வெறுமனே ஒரு பாடத்தைக் கற்பது போன்றாகாது. அது உங்களுக்கான ஒரு சர்வதேச தகைமைப் பத்திரமாக இருக்கும். இப்பொழுது நமது நாட்டின் பொருளாதார மற்றும் ஸ்திரமற்ற நிலைமை காரணமாக நாட்டிலிருந்து அநேகமானோர் தொழில் தேடி நாட்டை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருக்கும் நிலைமையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அதேவேளை சிறுபான்மையினராகிய நாங்கள் பல்வேறு வகையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்நிலைமையில் எங்களது குரல்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தி எங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலைiயில் நாங்கள் இருக்கின்றோம்.

சர்வதேச மட்டத்திற்கு நமது பிரச்சினைகளைக் கொண்டு செல்வதற்கு சர்வதே மொழியான ஆங்கிலத்தினூடான தொடர்பாடல் அறிவு இல்லாதிருப்பது ஒரு தடையாக இருந்து கொண்டிருக்கின்றது. இந்த மொழித் தொடர்பாடல் தடை காரணமாக எமது பிரச்சினைகளைத் தேசிய சர்வதே மட்டங்களுக்குக் கொண்டு சென்று தீர்வு காண முடியாத நிமைமை தொடரடந்து வருகின்றது.

ஆகவே ஆங்கிலத்தில் கற்று புலமை பெற்று நாம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற வேண்டும். ஆங்கில மொழி ஒருவருடைய ஆளுமையை உருவாக்கும் என்பதில் ஐயப்பாடு இல்லை. எனவே தற்போதைய நாட்டு பொருளாதார வீழ்ச்சி மற்றுமுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு தக்க தருணத்தில் கைகொடுக்கக் கூடியது ஆங்கிலக் கல்வியோகும்” என்றார்.

இந்நிகழ்வில் இன்னும் பல அதிதிகளும் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினர். மேலும் மாணவர்களின் கலை நாடக வெளிப்படுத்தல்கள் ஊடாக ஆங்கிலக் கல்வியின் அவசியம் உணர்த்தப்பட்டதோடு மாணவர்கள் இளைய சமூகத்தினர் மத்தியில் போதைப் பொருள் பாவனையின் தாக்கம் என்பனவும் வெளிப்படுத்தப்பட்டன.


No comments: