தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சைக்கான மேன்முறையீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2019 /2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதுடன், குறித்த நேர்முக பரீட்சைகள் தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய ஆண்டு, புதிய பாடத்திட்டம், அல்லது பழைய பாடத்திட்டம் என்பதை அதில் குறிப்பிடல் வேண்டும்.
மேலும் மேல்முறையீட்டுக்கான காரணம், விண்ணப்பதாரர்களின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
No comments: