News Just In

2/20/2023 01:31:00 PM

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!








2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2023ஆம் கல்வியாண்டுக்குரிய உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

2022ஆம் ஆண்டிற்குரிய கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ஆம்திகதி வரை பொறுப்பேற்கப்படும்.

இணையத் தளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

இதேவேளை, பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று திறக்கப்பட் டன.

மூன்றாம் தவணை அடுத்த மாதம் 24ஆம் திகதி நிறைவடையும். இதன்படி 2023ஆம் கல்வியாண்டின் முதலாம் தவணை அடுத்த மாதம் 27ஆம்திகதி ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் சகல பாடப்புத்தகங்களையும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் சுசில் பிறேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

No comments: