மாளிகைக்காடு நிருபர் - நூருல் ஹுதா உமர்
நீண்ட காலங்களில் பொது சுகாதார பரிசோதகர்களாக அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய எம் ஐ ஹைதர், எம் எம் எம்.பைசல், எஸ் வேல்முருகு ஆகியோர்களுக்கு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களாக பதவி உயர்வு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த உத்தியோகத்தர்களுக்கு பதவியேற்பு கடிதத்தை வழங்கி வைத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், இவர்களின் பதவி உயர்வு குறித்த பிரதேசத்திற்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்ப்பதோடு அவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்நிகழ்வின் போது பொதுமக்கள் சேவைக்காக எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் தானும் தனது உத்தியோகத்தர்களும் உதவ எப்போதும் தயாராக இருப்போம் என்றும் ஊக்கமளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.ஏ வாஜித் மற்றும் பிராந்திய மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
No comments: