மட்டு – துஷாரா
கிழக்கு மாகணத்தில் 45 நாட்களுக்குள் 1363 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணரும், சமூக வைத்திய நிபுணருமாண வைத்தியர் எஸ். அருள்குமரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த பல நாட்களாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக மழை தொடராக பெய்துவருகின்ற இந்நிலைமையில், டெங்குத் தொற்று தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 315 நோயாளர்கள் இனங்காணப்படுள்ளதாகவும், இதில் செங்கலடி, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு நகரம் போன்ற இடங்களில் தோற்றாளர்கள் பதிவாகியுள்ள இந்நிலையில், கல்முனை சுகாதார சேவைகள் பிரிவில் 780 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறிப்பாக, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவைகத்திற்குட்பட்ட பிரிவில் 203 டெங்கு நோயாளர்களும், அக்கரைபபற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவைகத்திற்குட்பட்ட பிரிவில் 148 நோயாளர்களும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவைகத்திற்குட்பட்ட பிரிவில் 118 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் 243 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 87 நோயாளர்களும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 58 நோயாளர்களும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 24 டெங்கு நோயாளர்களும், கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 19 நோயாளர்களும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 18 நோயாளர்களும், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பிரிவில் 16 நோயாளர்களும் பதிவாகியுள்ள இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் 7 சுகாகதார வைத்திய அதிகாரி அலுவைகத்திற்குட்பட்ட பிரிவுகளில் 25 நோயாளர்கள் இனங்காணப்பட்டடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பொதுமக்கள் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்தி, தாங்கள் வசிக்கின்ற சுற்றுப்புறச் சூழல்களை சுத்தமாகவும், டெங்கு நுளம்புகள் பரவும் விதத்தில் காணப்படும் பொருட்களை அகற்றுமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியம் கோரிக்கை விடுத்துள்ளது.
--

No comments: