News Just In

2/05/2023 08:39:00 AM

தொழுநோய் வாரத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு!

தொழுநோய் வாரத்தினை முன்னிட்டு பிறைந்துரைச்சேனை முஹைதீன் சனசமுக நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடாக தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வை சமுக மட்டத்தில் கொண்டு சொல்லும் நோக்கில் விழிப்புணர்வு கருத்தரங்கு (03.02.2023) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மாணவிகளுக்கு தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் முஹைதீன் சனசமுக நிலையத்தின் தலைவர் ஏ.ஜி.அஸ்லம் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நஸீர் தொழுநோயின் அறிகுறி பற்றியும் அதன் தாக்கம் தொடர்பாகவும் தெளிவு படுத்தினார்.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹாரூன், சனசமுக நிலையத்தின் செயலாளர் எஸ்.ஐ.எம்.நிப்ராஸ், அஸ்பக் அகடமியின் தலைவர் ஏ.எல்.எம்.இர்பான், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

No comments: