நூருல் ஹுதா உமர்
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த புதன்கிழமை கல்முனை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023/24 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தலைவராக போட்டியின்றி சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.றைசுல் ஹாதி தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் செயலாளராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். றோஸன் அக்தரும், பொருளாளராக சட்டத்தரணி ஏ.ஜி. பிரேம்நவாத் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் உப தலைவர்களாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ஸார் மௌலானா, சிரேஷ்ட சட்டத்தரணி என். சிவரஞ்சித், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி ஆரிகா காரியப்பர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வரலாற்றில் முதலாவது பெண் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி ஆரிகா காரியப்பர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments: