2021 ஆம் ஆண்டு க.பொ. உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவனுக்கு கையடக்க தொலைபேசியில் வைத்து விடைகளை காண்பித்த குற்றச்சாட்டில் இரு ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் – அடம்பன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை அதிபர் ஒருவருடைய மகனுக்கு கையடக்க தொலைபேசியில் வைத்து விடைகளை சொல்லிக் கொடுத்த குற்றச்சாட்டில், பரீட்சை மேற்பார்வையாளர்களாக செயற்பட்ட இரு ஆசிரியர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்றது.
இந்நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபனமாகிய நிலையில் இரு ஆசிரியர்களும் கட்டாய ஓய்வில் செல்ல கல்வி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments: