News Just In

2/18/2023 09:59:00 AM

இலங்கையில் 34 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள நிகழ்வு!

இலங்கையில் 34 வருடங்களுக்குப் பின்னர் ஐந்தாவது தடவையாகவும் குடியரசு ஊர்வலத்தை நாளை கண்டியில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தேசிய மறுமலர்ச்சியை உருவாக்குவதற்கும் நாட்டின் மீது சர்வதேச ஈர்ப்பை பெறுவதற்கும் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை அர்த்தப்படுத்தும் வகையில் இது அமையும் என மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மல்வத்து அஸ்கிரி மகாநாயக்கர் தலைமையில் தியவடனை நிலங்க தேலவின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடைபெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகம், பௌத்த அமைச்சு மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கையின் முதல் குடியரசு ஊர்வலம் 1854ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலையில் 1875, 1981 மற்றும் 1987ஆம் ஆண்டுகளிலும் இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: