News Just In

1/25/2023 03:06:00 PM

போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாப்போம்.




எஸ்.எம்எம்.முர்ஷித்.
போதைப்பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களால் கையாளப்படுகின்ற நாடாக எமது நாடு மாறியிருப்பது ஒரு கவலையான விடயம் என்று ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தெரிவித்தார்.

ஓட்டமாவடி ஹீரோலைன்ஸ் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொது கூட்டமும் போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கும் ஓட்டமாவடி ஹன்ஸா அரிசி ஆலை வளாகத்தில் கழகத்தின் தலைவர் எஸ்.எல்.நளீர் தலைமையில் இடம் பெற்ற போதே பிரதி திட்ட பணிப்பாளர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில். போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் தங்களது விற்பனையை அதிகரித்து கொள்வதற்காக தற்போது மாணவர்களையும் இணைஞர்களையும் அடையாளப்படுத்தி செயல்படுகின்றனர்; இதில் இருந்து நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு தவிர்ந்து கொள்வது என்பதுதான்; இன்று எம் மத்தியில் உள்ள முக்கியமான பொறுப்பாகும்.

போதைப் பொருட்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய இரசாயன பொருட்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற பொருட்கள்தான் அதில் அதிகம் இருக்கின்றது நாம் ஒவ்வொருவரும் அதில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதுடன் நம்மை சூழவுள்ளவர்களையும் பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவரும் சமுக சேவையாளருமான எம்.ஏ.சி.எம்.நியாசுதீனினாள் கழக வீரர்களின் உதைபந்தாட்டத்திற்கான பாதனி கொள்வனவிற்காக அறுபத்திரெண்டாயிரம் ரூபா பணமும் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஓட்டமாவடி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எம்.மன்சூர், ஓட்டமாவடி பிரதேச செயலக பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், தொழிலதிபர் எம்.மனாப், ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக முகாமையாளர் எஸ்.எம்.நௌபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


No comments: