News Just In

1/26/2023 12:00:00 PM

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த யாழ் பாடசாலை மாணவன்!




தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொஸ்கோ ஆரம்ப பாடசாலை மாணவன் யலீபன் யதூசிகன் 191 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பொஸ்கோவில் 216 மாணவர்கள் தரம் 5 பரீட்சையில் தோற்றியதில் 154 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர்.

இதேபோன்று யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் 217 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 124 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை தாண்டியுள்ளனர். இவர்களில் கிரிதரன் அர்மிதா 186 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இதேநேரம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் இம்முறை 188 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றியதில் 91 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகியது.

இவ்வாறு வெளியாகிய பெறுபேற்றில் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் இதுவாகும்

No comments: