கிழக்கு மாகாண சபையினால் செய்யப்பட்ட வருடாந்த இடமாற்றங்களை முறையாக நடைமுறைப்படுத்தாதமையினால், உத்தியோகத்தர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாரக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
2023 ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற கட்டளைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமையினால் அலுவலகங்களில் ஆளணிச் சமநிலை சீர்குலைந்துள்ளதுடன், பொதுமக்கள் தமது சேவைகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments: