News Just In

1/23/2023 12:11:00 PM

மாணவர்களுக்கான போசனை திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடல்



நூருல் ஹுதா உமர்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மாணவர்கள் போசாக்கு தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலைமை தோன்றலாம் என்ற அடிப்படையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாணவர்களின் போசனை தொடர்பான செயற்றிட்டத்தை தேசிய ரீதியாக முன்னெடுப்பதற்கான பிரேரணை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்தது
அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளின் ஒரு அங்கமாக கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி எம் ஏ நபீல் அவர்களினால் மாணவர்களுக்கான போசனை திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் கலந்துரையாடல் ஒன்று ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீட பீடாதிபதி யூ எல் அப்துல் மஜீத் தலைமையிலான துறை சார் நிபுணர்கள் மற்றும் விரைவுரையாளர்களும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் ரிபாஸ் தலைமையில் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எம் பி ஏ வாஜித், வைத்தியர் டீ.எஸ்.ஆர்.டீ ரஜப், சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஐ.எம் முஜீப், உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் இஹ்பாம், ஆயுர்வேத உற்பத்தி பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி மற்றும் ஏனைய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கு பற்றியிருந்தார்கள்.

இக்கலந்துரையாடலின் போது துறைசார் நிபுணர்களின் நிபுணத்துவத்தின் ஊடாக தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற போசனை மிகுந்த பிஸ்கட்டுகள் மற்றும் போசனை தூள்கள் என்பவற்றை மேலும் நவீனத்துவப்படுத்தி அதனை சந்தைப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்குமான மேலதிக பயிற்சிகளை பெறுவதற்கும் இக்கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது


No comments: