மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கான அறிவிப்புகள் பல மாவட்டங்களில் இருந்து அரசாங்க அச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இதுவரை கிடைத்துள்ள அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தின்படி, தேர்தல் ஆணைக்குழுவினால் தேர்தல் திகதியை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும்.
இதன்படி, தேர்தல் திகதி, நேரம் மற்றும் கட்சிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு உரிய வர்த்தமானி அறிவித்தல் சமர்ப்பிக்கப்படும்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியை ஆரம்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்க அச்சகத்திற்கு அறிவித்துள்ளது.
அதன்படி பெப்ரவரி முதல் வாரத்தில் வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அச்சகம் தெரிவித்துள்ளது
No comments: