தனது மனைவிக்கு பொது இடத்தில் வைத்து முத்தமிட்ட கணவரை கும்பலொன்று சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம், சரயு நதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,சரயு நதியில் மனைவியுடன் குளித்துக் கொண்டிருந்த குறித்த நபர், தனது மனைவிக்கு முத்தமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குறித்த நபரை தனியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதேசமயம் இது குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இத்தாக்குதலானது எப்போது நடைபெற்றது? என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், இது குறித்தமேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: