குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களுக்கு நிதிச் சலுகை வழங்குவதற்கும் 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்னதாக தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நிதிச்சலுகைகளை 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை, மேலும் ஐந்து மாத காலத்திற்கு நீடிப்பதற்கு தேவையான நிதியொதுக்கீட்டை வழங்க நேற்று முன்தின அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments: