நான் உன்னை ஆச்சரியப்படுத்தப்போகிறேன்´ என கூறி பல்கலைக்கழக மாணவியின் கண்களை கட்டி தனது காதலியை கொன்றதாக கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கின் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கும் போதே சந்தேகநபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது காதலியை ´சூட்டி´ என அழைப்பதாகவும், முக்கியமான ஒரு விடயத்தை பேச விரும்புவதாக கூறி தனது காதலியை கொழும்பு குதிரை பந்தய திடலிற்கு அழைத்து வந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
தனது காதலி தன்னை தொடர்ந்து திட்டுவதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தான் மனநோயாளி எனக் கூறி கேலி செய்வதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் 2020 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட யுவதியுடன் தொடர்பு வைத்திருந்தாலும், மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை தெரிவித்திருக்கவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் தனது காதலிக்கு இது தெரியவந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
அப்போது யுவதி தன்னுடன் கோபமடைந்து காதல் தொடர்பை நிறுத்தியதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
அவள் என்னை எப்போதும் "பைத்தியக்காரன்" என்று அழைப்பதாகவும் அந்த இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வேறு காதல் உறவால் காதலி மாறினாரா என விசாரித்ததில், அவளுக்கு அப்படியொரு உறவு இல்லை என்பது தெரியவந்ததாக காதலன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தனது காதலி வேரொருவரின் வசமாவதை தடுப்பதற்காக அவளைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கூறினார்.
கடந்த சனிக்கிழமை தனக்கும் தனது காதலிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி கொலைத் திட்டத்தின் முதற்கட்டமாக வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இருந்து 140 ரூபாவுக்கு கத்தி ஒன்றை வாங்கியதாக இளைஞன் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்து அதே கத்தியை பையில் வைத்துக்கொண்டு வந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் காலை முதல் விரிவுரையில் கலந்து கொண்ட பிறகு, "ஒரு முக்கியமான விடயம் பேச வேண்டும் எனவே குதியை பந்தய திடலிற்கு செல்லலாம் என சூட்டியிடம் கூறினேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட யுவதி முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த போதிலும், கட்டாயப்படுத்தியதால் அவர் அதற்கு சம்மதித்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
நான் உன்னை ஆச்சரியப்படுத்த விரும்புவதாகக் கூறி கொலைசெய்யப்பட்ட யுவதியின் கண்களை கைக்குட்டையால் கட்டி அவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான இளம் பெண் அலறி, கண்களில் இருந்த கைக்குட்டையை கழற்றி உதவி கேட்டதாகவும், அதன்பின் மீண்டும் கழுத்தில் கத்தியால் குத்தியதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
அந்த இடத்தில் இருந்தவர்கள் கொலை நடந்த இடத்திற்கு வந்து விடுவார்கள் என்று பயந்து தான் அந்த இடத்தை விட்டு ஓடியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
"ஓடிப்போகும் தருணத்தில் நான் சூட்டியைத் திரும்பிப் பார்த்தேன், அந்த நேரத்தில் சூட்டி எந்த அசைவும் இல்லாமல் படுத்திருந்தாள்" என அந்த இளைஞன் தனது வாக்குமூலத்தில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து நேராக வெல்லம்பிட்டிக்கு சென்று புகையிரதம் வரும் வரை காத்திருந்ததாகவும், புகையிரதம் இல்லாத காரணத்தினால் களனி ஆற்றில் குதித்து இரண்டு முறை தற்கொலை செய்து முயன்றதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்
No comments: