க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர பரீட்சையின் பாடநெறிகளுக்கு ஏற்ப வகுப்புக்களில் சேர்ப்பதற்கான கடிதம் வெளியிடப்பட மாட்டாது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதி சுற்றுநிரூபம் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாம் வசிக்கும் பிரதேசத்தில் குறிப்பிட்ட பாடநெறிகள் உள்ள பாடசாலை ஒன்றை பெற்றுக்கொள்ள வலய கல்விப்பணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.
2023ஆம் ஆண்டுக்காக இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்படவுள்ளது.
இதன்படி 2023ஆம் ஆண்டின் முதலாவது தவணை ஆரம்பமாகும் மார்ச் 27ஆம் திகதிக்குள் குறிப்பிட்ட அறிவித்தல் வெளியிடப்படும்.
அதுவரை இடைநிலை வகுப்புகளுக்காக தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதத்தை அமைச்சு வெளியிட மாட்டாது.
No comments: