கனடாவில் ரிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த கமலீயா தலாச்சி என்ற பெண்ணுக்கு லொட்டோ சீட்டிலுப்பில் 60 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசாக கிடைத்துள்ளது.
பரிசு வென்றெடுத்தமை குறித்த இன்ப செய்தியை தாயுடன் பகிர்ந்து கொள்ள முடியாது அதிர்ச்சியில் வாயடைத்து போனதாக கமலீயா கூறியுள்ளார்.
பரிசு வென்றதாக அறிந்து கொண்ட இடத்திலிருந்து தமது வீட்டுக்கு 30 நிமிட பயணம் எனவும், இந்தப் பயணத்தின் போது தாயுடன் தொடர்பு கொண்டு செய்தியை சொல்ல முடியாத அளவிற்கு தாம் அதிர்ச்சியுற்றிருந்ததாக தெரிவிக்கின்றார்.
கடந்த நவம்பர் மாதம் 29ம் திகதி நடைபெற்ற சீட்டிலுப்பில் கமலீயா ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளார்.
உலகை சுற்ற விரும்புவதாகவும், குடும்பத்துடன் பணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், முயற்சியான்மையாளராக உருவாக பணத்தை முதலீடு செய்ய உள்ளதாகவும் கமலீயா தெரிவிக்கின்றார்.
அதேவேளை, மேலும் ஓர் 60 மில்லியன் டொலர் பரிசுத் தொகை ரிச்மன்ட்ஹில் பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வெற்றியாளர் இதுவரையில் பரிசினை உரிமை கோரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments: