News Just In

1/08/2023 04:59:00 PM

யாழில் 3 கோடியே 26 இலட்சம் ரூபாய் வெற்றியாளருக்கு காசோலை வழங்கப்பட்டது!




அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வட மாகாணத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தலைமையில் நேற்று (07) காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி தவகோகுலன், கிளிநொச்சி மற்றும் வவுனியா விற்பனை மேம்படுத்தல் அதிகாரி பிரதீபன் ஆகியோரின் முன்னிலையில் மன்னார் மாவட்டத்தில் சனிதா ரிக்கற்றின் மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு மாபெரும் சுப்பர் பரிசான 3 கோடி 26 இலட்சம் ரூபா காசோலை மற்றும் பளை பிரதேசத்தில் வலம்புரி அதிஷ்ட ரிக்கற் மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு 20 இலட்சம் காசோலை மற்றும் சங்கானை, யாழ்பாணம், சாவகச்சேரி, வவுனியா மன்னார் பிரதேசங்களில் சனிதா, அதோடிபதி, கப்ருக்க அதிஷ்ட ரிக்கறூடாக வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு தலா 10 இலட்சம் காசோலைகளும் ஆளுநர் ஜீவன் தியாகராசா அவர்களால் வழங்கப்பட்டது

No comments: