News Just In

12/26/2022 06:29:00 PM

தாய் மரணம் - உடலை ஏற்க மறுத்த மகள்!




குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு நபருடன் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் உயிரிழந்த தாயின் உடலை பொறுப்பேற்க முடியாது எனக்கூறி மகள் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற சம்பவம் ஹோமாகமை வைத்தியசாலையில் நடந்துள்ளது.

உயிரிழந்தபெண்ணின்பாதுகாவலர்எனக்கூறிவைத்தியசாலையில்,தகவல்களை வழங்கியிருந்த பெண்ணுடன் வாழ்ந்ததாக கூறப்படும் நபர், போலியான முகவரியை வழங்கி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பிரேதப் பரிசோதனைகளை மேற்கொள்ள்ள முடியாது, கடந்த 23 ஆம் திகதியில் இருந்து உடல், ஹோமாகமை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுகவீனம் காரணமாக கடந்த 20 ஆம் திகதி பெண்ணின் பாதுகாவலர் எனக்கூறிக்கொண்ட நபர் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் இலக்கம் 94 கிரிகம்பமுணுவ, கொல்கஸ்ஹோவிட்ட என்ற முகவரியையும் வழங்கியுள்ளார்.

இதன் பின்னர் சிலமுறை வைத்தியசாலைக்கு வந்து பெண்ணின் நலன் குறித்து விசாரித்து சென்றுள்ளார். கடந்த 23 ஆம் திகதி பெண் உயிரிழந்த பின்னர், அந்த நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்த நபர் வழங்கிய முகவரி தொடர்பாக கிராம உத்தியோகஸ்தரிடம் விசாரித்த போது, அது போலியானது என தெரியவந்துள்ளது. இந்த பெண்ணும் ஆணும் அத்துருகிரிய பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மரணமடைந்த பெண்ணின் பொறுப்பாளரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தில், பெண்ணின் மகள் ஒருவரை அழைத்து பிரேதப் பரிசோதனை செய்ய உடலை பொறுப்பேற்குமாறு அறிவித்த போதிலும் மகள் மறுத்துள்ளார்.

“இங்கிருப்பது எனது தாய் தான். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணம் செய்து தனித்தனியாக இருக்கின்றனர். அம்மா எங்களை கைவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.

எங்களை பற்றி தேடிப்பார்க்கவில்லை. எமக்கு மிகப் பெரிய வெட்கத்தை ஏற்படுத்தினார். இதனால், உடலை என்னால், பொறுப்பேற்க முடியாது, அந்த நபரிடமே உடலை ஒப்படையுங்கள்” எனக் கூறி விட்டு மகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், போலி முகவரியை வழங்கி விட்டு தப்பிச் சென்ற நபரை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஹோமாகமை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments: