News Just In

11/11/2022 12:16:00 PM

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த கோரி பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!




இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கையை வலியுறுத்தவேண்டும், அத்துடன் இராணுவ செலவினங்களை குறைக்குமாறு கோரவேண்டும் என்று அந்த நாட்டை வலியுறுத்தவேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றில் கோரப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பாக நேற்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின்போது, இந்த வலியுறுத்தல்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ளனர்.

விவாதத்தை ஆரம்பித்து வைத்த எலியட் கோல்பர்ன், கார்ஷால்டன், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு அப்பால் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச நடவடிக்கை மட்டும் போதாது. போர்க்குற்றங்களை உண்மையாக விசாரிக்கவும் குற்றவியல் பொறுப்புக்கூறலைத் தொடரவும் ஒரு பொறிமுறை அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையின் போர்க்குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை கொல்பேர்ன் மேலும் வலியுறுத்தினார்.

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்யவும், அவர்களைத் தண்டிக்கவும் குறிப்பிட்ட ஆதாரங்கள் திரட்டப்படவேண்டும் என்று அவர் கோரினார்.

No comments: