News Just In

11/29/2022 12:03:00 PM

வடக்கு கிழக்கிலுள்ள வளங்களை சரியான முறையிலே பயன்படுத்தினால் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை.



.
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வடக்கு கிழக்கு மாகாணங்களிலே போதுமான வளங்கள் உண்டு அவற்றைச் சரியான முறையிலே பயன்படுத்தினால் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் சங்கங்களின் பதிவாளருமான பொறியியலாளர் என். சிவலிங்கம் தெரிவித்தார்.

ஏறாவூர் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு இலாபப் பங்கும் சீருடையும் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் கூட்டுறவுச் சங்கப் பணிப்பாளர் சபைத் தலைவர் எம்.எல். அப்துல்லத்தீப் தலைமையில் ஏறாவூர் கூட்டுறவுச் சங்க கூட்டுறவு வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் புதன்கிழமை 29.11.2022 இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்> மாகாணத்தில் கூட்டுறவுச் சங்கம் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது அதற்குக் காரணம் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அசாதாரண நிலையிலும் நாங்கள் எதற்கும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபித்திருக்கின்றோம். பல இடர்களைச் சந்தித்த போதும் மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே நாங்கள் மீள் எழுந்து கொண்டிருக்கின்றோம்.

அதன் காரணமாகவே ஏறாவூர் கூட்டுறவுச் சங்கம் மிகவும் உன்னதமான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்குக் காரணம் கூட்டுறவின் அச்சாணியாக இருந்து இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பணியாளர்களும் அதன் பணிப்பாளர் சபைத் தலைவரும்தான். கட்டுப்பாட்டோடு இருந்து பவணியாற்றுவதால் சாதனைகளை நிலைநாட்ட முடியும். சீன அரிசி வழங்கலில்; நாங்கள் பங்கெடுத்து கூட்டுறவுச் சங்கங்களின் பெயரைக் கெடுத்துக் கொள்ளவில்லை. அந்த அரிசி தரமற்றது என்ற விமர்சனம் பரவலாக இருந்தது.” என்றார்.

ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் ஏறாவூர் கூட்டுறவு வதை;தியசாலை உள்ளிட்ட இன்னும் பல அதன் கிளை நிறுவனங்களில் பணியாற்றும் 58 பணியாளர்களுக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் இலாபப் பங்குப் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான சீருடைப் பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. வி. தங்கவேல் சங்க உப தலைவர் எம்.பி.எம்.ஏ. சக்கூர், பொதுமுகாமையாளர் யூ.எல். சபீர் உட்பட கூட்டுறவு அதிகாரிகள். பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments: