News Just In

11/05/2022 11:09:00 AM

ஒற்றை வார்த்தையால்... பிரான்ஸ் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தவர் இடைநீக்கம்!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இனவெறி கருத்து தெரிவித்த தீவிர வலதுசாரி எம்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் கிரிகோயர் டி ஃபோர்னாஸ் என்ற உறுப்பினர், ஆப்பிரிக்காவுக்குத் திரும்பு என்று கூச்சலிட்டார்.

வியாழக்கிழமை கருப்பினத்தவரான நாடாளுமன்ற உறுப்பினர் கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ, கடலில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோர் குறித்து பிரெஞ்சு அரசாங்கத்திற்கு சவால் விடுத்தபோது குறித்த உறுப்பினர் தொடர்புடைய இனவாத வார்த்தைகளை உச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் உடனடி சலசலப்பை ஏற்படுத்தியது, மட்டுமின்றி, நாடாளுமன்ற அவையின் தலைவர் கூட்டத்தை இடைநிறுத்துவதற்கு வழிவகுத்தது.

மேலும், டி ஃபோர்னாஸின் கருத்துக்கள் அரசியல் வட்டாரம் முழுவதிலும் இருந்து கண்டனத்தைத் தூண்டியது. இந்த நிலையில், அவர் தற்போது 15 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், இது தேசிய சட்டமன்ற விதிகளின் கீழ் அதிகபட்ச தண்டனையாகும்.

தமது சக ஊழியரின் கருத்துக்களால் தாம் ஆழமாக புண்பட்டதாக பிலோங்கோ கூறியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் இச்சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில், டி ஃபோர்னாஸின் கருத்துக்களால் அதிர்ச்சியடைந்ததாகவும், இது தீவிர வலதுசாரிகள் மற்றும் பிரெஞ்சு சமூகத்தின் பிற பகுதிகளில் இனவெறி பற்றிய புதிய கேள்விகளை எழுப்பும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தாம் இந்த விடயத்தில் ஒரு அப்பாவி எனவும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த 15 நாட்கள் இடைநீக்கம் என்பது மிகவும் நியாயமற்றது எனவும் டி ஃபோர்னாஸ் தெரிவித்துள்ளார்.

No comments: