News Just In

11/10/2022 07:41:00 AM

பிரித்தானிய மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்!

பிரித்தானிய மக்களுக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடியை சமாளிப்பதற்காக ரூ.32 ஆயிரம் உதவித்தொகையை அந்நாட்டு அரசாங்கம் வழங்குகிறது.

குறைந்த வருமானம் பெறும் லட்சக்கணக்கான பிரித்தானிய மக்களுக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசாங்கத்திடமிருந்து ரூ.32 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்குகளை சென்று சேர இருக்கிறது.

மொத்தத் உதவித்தொகையானது ரூ.65 ஆயிரமாக உள்ள நிலையில் அதன் முதல் பாகமானது ஏற்கெனவே மக்களின் வங்கிக் கணக்குகளை சென்று சேர்ந்துள்ளது.

வேலைகள் மற்றும் ஓய்வூதியத்துறை இந்த உதவித்தொகையை தாங்களாகவே முன்வந்து மக்களின் வங்கிக் கணக்குகளில் சேர்ப்பார்கள்.

இதற்காக மக்கள் எந்தவித பிரயத்தனமும் படவேண்டியது இல்லை என்றும் மோசடிக்காரர்களிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மக்கள் தங்களது வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் ஏடிஎம் பின்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படு வருகின்றனர்.

எரிசக்தி கட்டணத்திலும் ஒரு வருடத்திற்கு ரூ.40 ஆயிரம் வரை குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க விசயமாகும்.

No comments: