News Just In

11/22/2022 09:51:00 AM

சொலமன் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம்! ரிக்டர் அளவு 7.3!




சொலமன் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் பதிவாகியிருந்ததையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தனஇந்த நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாலமன் தீவுகளில் உள்ள மலாங்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தது.

இதேவேளை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், நிலநடுக்கத்தின் அளவை 7.3 ரிக்டரில் இருந்து 7ஆகக் குறைத்துள்ளது.இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான சுனாமி அலைகள் சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்திருந்தது.

No comments: