News Just In

11/21/2022 07:46:00 AM

கட்டார் ராஜகுடும்பத்தின் பிடிவாதம்: 40 மில்லியன் பவுண்டுகளை இழக்கும் FIFA!

கட்டார் கால்பந்து அரங்கத்தில் பீர் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், FIFA அமைப்புக்கு 40 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது.

இருப்பினும், தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் மது விற்பனைக்கு கவனம் செலுத்தப்படும் என FIFA அமைப்பு கூட்டறிக்கை ஒன்றில் உறுதி கூறியுள்ளது.

கட்டார் கால்பந்து உலகக் கிண்ணம் தொடர்பில் அமெரிக்க மது நிறுவனம் ஒன்று 63 மில்லியன் பவுண்டுகளுக்கு FIFA அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

ஆனால் தற்போது கட்டார் ராஜகுடும்பத்தின் கட்டாயம் காரணமாக கால்பந்து அரங்கங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒப்பந்தத்தை மீறும் செயல் என கூறி 40 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு கோரியுள்ளனர்.

இதனிடையே கால்பந்து உலகக் கிண்ணமானது FIFA அமைப்பின் முழு கட்டுப்பாட்டில் தான் முன்னெடுக்கப்படுகிறது என அந்த அமைப்பின் தலைவர் Gianni Infantino உறுதிபட தெரிவித்துள்ளார்.

No comments: