News Just In

11/10/2022 03:38:00 PM

204 கோடி டொலர் (75,195 கோடி ரூபா) ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டது!






அமெரிக்க லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில், 204 கோடி டொலர்கள் (சுமார் 75,195 கோடி இலங்கை ரூபா, சுமார் கோடி இந்திய ரூபா) அதிகமான பெறுமதியுடைய ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டுள்ளது.

உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் வெல்லப்பட்ட மிகக் கூடுதலான ஜக்பொட் பரிசு இதுவாகும்.

பவர்போல் எனும் லொத்தர் சீட்டிழுப்பிலேயே இப்பாரிய பரிசுத்தொகை வெல்லப்பட்டுள்ளது.

தனி ஒரு சீட்டுக்கு இந்த பரிசு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பவர்போல் ஜக்பொட் பரிசுத்தொகை 160 கோடி டொலர்களாக அதிகரித்து சாதனை படைத்தது. ஆனால் அன்றைய தினமும் இப்பரிசு வெல்லப்படவில்லை.

அதையடுத்து கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை சீட்ழுடிப்புக்கான ஜக்பொட் பரிசுத் தொகை 2.04 பில்லியன் டொலர்களாக அதிகரித்தது.



ஜக்பொட் லொத்தர்சீட்டை விற்பனை செய்த ஜோசப் சஹாயாத்

இச்சீட்‍டிழுப்பு திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்தது. ஆனால், அதிக ‍‍டிக்கெட் விற்பனை காரணமாக தரவுகளை பரிசீலிப்பதற்காக செவ்வாய்க்கிழமை காலை நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது,

இச்சீட்டிழுப்பில், கலிபோர்னியா மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்ட தனியான ஒரு லொத்தர் சீட்டுக்கு இப்பரிசு கிடைத்துள்ளதாக பவர்போல் லொத்தர் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

வெற்றியாளர் ஒரே தடவையில் சுமார் 140 கோடி டொலர்களை பெற முடியும். அல்லது மொத்தத் தொகையான 204 கோடி டொலர்களை 30 வருடங்களில் தவணை முறையில் பெற முடியும்.

இந்த ஜக்பொட் பரிசை வென்றவரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

லொத்தர் சீட்டு விற்பனை செய்தவருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்

இதேவேளை. பரிசுக்குரிய லொத்தர் சீட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36 கோடி இலங்கை ரூபா, 8 கோடி இந்திய ரூபா) போனஸாக பவர்போல் லொத்தர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜோசப் சஹாயாத் என்பவரே இவ்வாறு 10 லட்சம் டொலர் போனஸ் தொகையை பெற்றுள்ளார். இவர் சிரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்.

லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்வதை தான் விரும்புவதாக கூறும் ஜோசப் சஹாயெத், இவ்வளவு பெருந்தொகை பரிசு தனக்கு கிடைத்த போதிலும் வேலைசெய்வதை நிறுத்த மாட்டேன். வழக்கம் போல் காலை 6.00 மணிக்கு கடையில் பணியாற்றச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதியின் பின் பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு வெல்லப்பட்டமை இதுவே முதல் தடiவாயகும்.

2 டொலர் விலையுள்ள பவர்போல் லொத்தர் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாநிலங்கள், டிஸ்ட்ரிக் ஒவ் கொலம்பியா, புவர்ட்டோ ரிக்கோ, வேர்ஜின் தீவுகள் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த டிக்கெட்டுகளை வாங்குபவர்கள் 1 முதல் 59 வரையான 5 வெள்வேறு இலக்கங்களை தெரிவு செய்வதுடன், பவர்போல் இலக்கமாக 1 முதல் 25 வரையான ஒரு இலக்கத்தை தெரிவு செய்ய வேண்டும்.

No comments: