News Just In

10/17/2022 08:52:00 AM

நரபலி கொடூரம் !




கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் பல பெண்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேரள நரபலி சம்பவத்தில் கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் தர்மபுரி, பென்னாகரத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பகவால் சிங்கின் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் 10 கிலோ மனித இறைச்சி மற்றும் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, வீட்டின் பல்வேறு இடங்களில் இரத்தக்கறை இருந்துள்ளதோடு, பிரஷர் குக்கரில் மனித கறியை சமைத்ததற்கான தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

கேரளாவில் சாலைகளில் லொத்தர் சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் ஜூன் செப்டெம்பர் மாதங்களில் மாயமான நிலையில் இது குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பகவல்சிங், லைலா மற்றும் பெரம்புவாரைச் சேர்ந்த முகம்மது ஷஃபி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பக்வந்த் சிங் திருவாழா பகுதியில் மசாஜ் சிகிச்சையாளராக உள்ளார். இவரது மனைவி லைலா. பணக்காரராக வாழ ஆசைப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதிக்கு முகமது ஷபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நரபலி கொடுத்தால் பணக்காரர்களாக வாழலாம் என தம்பதியை முகமது ஷபி மூளைச்சலவை செய்துள்ளார். இதை நம்பிய தம்பதி, இதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி முகமதுவிடம் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் கடவந்தரா பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை பக்வந்த் வீட்டிற்கு முகமது அழைத்து வந்துள்ளார்.

இதன்போது பக்வந்த் அவரது மனைவி லைலா மற்றும் முகமது ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை நரபலி கொடுத்துள்ளனர். பெண்ணின் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தபின் உடலை துண்டு துண்டாக வெட்டி திருவாழா பகுதியில் ஆள்நடமாட்டமற்ற இடத்தில் புதைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நரபலி நடந்த பகவல்சிங் வீட்டிற்கு குற்றவாளிகளை அழைத்து சென்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோப்பநாய்களுடன் ஆய்வு நடத்தி வரும் பொலிஸார், வீட்டின் பின்புறம் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலும் ஆய்வு செய்துள்ளனர். இவர்களுடன் தடயவியல் துறை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பகவால் சிங் வீட்டில் பொலிஸார் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



இதன்போது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் 10 கிலோ மனித இறைச்சி மற்றும் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரிவாள் மற்றும் கத்தியால் உடலை வெட்டியதில் வீட்டின் பல்வேறு இடங்களில் இரத்தக்கறை ஏற்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் அடையாளம் காண்பதில் சிக்கல்

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழகப் பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பத்மாவின் உடலை அடையாளம் காட்டுவதற்காக அவரது மகன்கள் உள்ளிட்ட உறவினர்கள் கேரளா சென்றுள்ளனர்.தோண்டி எடுக்கப்பட்ட பத்மாவின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பத்மா குடும்பத்தினரிடம் இருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன், பத்மாவின் உறவினர்கள், அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments: