News Just In

10/13/2022 07:37:00 AM

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்களில் காணி அபகரிப்பைத் தடுக்குமாறு கோரிக்கை!

தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான காணிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோரின் காணிகளைத் தோட்ட நிறுவனங்கள் மீண்டும் அபகரித்து வருவதையிட்டு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அ. அரவிந்தகுமார் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன அவர்களுக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; பெருந்தோட்டங்களில் வகிக்கும் தொழிலற்றவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் விஷேட அனுசரணையுடன், பல தசாப்தங்களாக பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பயிர்ச்செய்கைகளில் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வருபவர்களின் காணிகளை அபகரிக்கும் செயல்திட்டத்தை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு செயற்படுமாறு பெருந்தோட்டத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு இவர்களின் பங்களிப்பு தேசிய ரீதியில் பல நன்மைகளை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மலையக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், தோட்ட நிறுவனங்களின் அடாவடி செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறும் அந்த கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூருல் ஹுதா உமர்

No comments: