News Just In

10/08/2022 04:49:00 PM

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் 25 வது தேசிய மாநாடு!

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் 25 வது தேசிய மாநாடு மகாரகம் இளைஞர் சேவை மன்றத்தில் மிகப் பிரமாண்டமாக சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜெயசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதான விருந்தினராக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினருமாகிய கே டி லால் காந்த அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிர்மலா கமகே, அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக வணக்கத்திற்குரிய யல்வல பஞ்ஞா சேகர தேரர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மற்றும் வடக்கு கிழக்கு மற்றும் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் சிங்கள முஸ்லிம் அதிபர் ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் லால் காந்த அவர்கள் பேசுகையில் ஜனாதிபதி ரணில் அவர்களால் நாட்டை கட்டி எழுப்ப முடியாது ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளே இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றார்கள் மக்கள் முழுமையாக இவர்கள் மீது நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர் உடனடியாக மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும் அதன் மூலம் புதிய ஆட்சி அமைத்து நாட்டை கட்டி எழுப்ப முடியும் எனவும் அதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜெயசிங்க அவர்கள் பேசுகையில் அதிபர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது நாம் போராடி பெற்றுக் கொண்ட சம்பளம் ஒரு பகுதி மாத்திரமே மிகுதியைப் பெற்றுக் கொள்ள நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து போராட வேண்டும் அந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தயாராக இருக்கின்றது என கூறினார்.

சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் பேசுகையில், வடக்கு கிழக்கில் கல்வியில் பாரிய பிரச்சினைகள் இருப்பதாகவும் அவை இன்னும் தீர்க்கப்படாதுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் காலத்தை கடத்துகின்றார்கள் அதேபோன்று மலையகத்திலும் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. நாம் எமது உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் இந்த ஆட்சியாளருடன் போராடிக் கொண்டிருக்க முடியாது. மக்கள் நலன் சார்ந்த மக்கள் ஆட்சியை உருவாக்க அதிபர் ஆசிரியர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நாம் புத்தகக் கல்வியை மாத்திரம் போதிக்காமல் மாணவர்களுக்கு அனுபவம் சார்ந்த நடைமுறை கல்வியை போதிக்க வேண்டும் அப்போதுதான் ஒரு சிறந்த சமூகத்தை நாம் உருவாக்க முடியும் அதற்காக அனைத்து அதிபர் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அத் தீர்மானங்கள் பின்வருமாறு,

01)74 வருடங்களாக தடுமாறும் அரசியல் இந்த நாட்டின் சமூக பொருளாதாரத்தின் தேகத்தையே  கீழே வீழ்த்தியுள்ள பின்புலத்தின்  விளைவாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கல்வி உட்பட இலவசக்கல்வியும் அழிவின் பாதையை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் நாட்டின் எதிர்காலத்தில் முன்னோடிகளாகப் பயணிப்பவர்களான இலங்கை ஆசிரியர்களான உங்களினதும் எங்களினதும் சமூகப் பொறுப்பு மிகப் பெரியது நாட்டின் எதிர்காலச் சந்ததியினருக்கு சிறந்தொரு சமூகத்தை மரபுரிமையாகக்கிக் கொடுப்பதற்கான மாபெரும் பணியின் ஒரு பிரிவினராக இருப்பதோடு  74 வருடங்களாக அழுத்தம் பிரயோகிக்கின்ற மற்றும் அழிவை நிகழ்த்துகின்ற அரசியல் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்கள் நல அரசியல் கலாசாரமொன்றை வெற்றி கொள்வதற்காக இலங்கையின் சகல ஆசிரியர்களும் மற்றும் அதிபர்களும் முழுமையாக ஒத்துளைத்துச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதனை இந்தப் பெருமை மிகு 25 ஆவது வருட தேசிய மாநாடு முன்மொழிந்து நிற்கிறது.

02) வரும் காலங்களில் புதிய அரசியல் கலாசாரங்களோடு மக்கள் நல ஆட்சி அமையப்பெற வேண்டும் என்பதனை நம்புகின்ற இந்த மாநாடு அவ்வாறான ஆட்சியினுள் நாட்டுக்குப் பொருத்தமான கட்டமைப்பின் மாற்றத்தோடு விருத்தியடைந்த விஞ்ஞான ரீதியான கல்வி முறைகளைச் செயற்படுத்த வேண்டும் என்பதனையும் அந்த முறைகள் சமூகத்தின் யதார்த்தமாக அமைய வேண்டும் என்பதனையும் அதில் இலங்கை ஆசிரியரின் கடமை பொறுப்பு மற்றும் செயற்பாடுகள் அளப்பரியது என்பதனையும் எடுத்துரைக்கும் இந்த மாநாடு மிகவும் முன்னேற்றமடைந்த கல்வி முறைகளை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கான உறுதியான போராட்டத்துக்கு சகல முற்போக்கான ஆசிரிய பரம்பரையினரதும் சக்தியையும் மற்றும் ஆற்றல்களையும் ஒன்றுதிரட்ட வேண்டும் என்பதனையும் முன்மொழிந்து நிற்கிறது.

03)மிகவும் முன்னேற்றமடைந்த சமூகத்தை இலங்கை தேசத்தில் உருவாக்கும் கடமை மற்றும் பொறுப்புமாக சமூக மாற்றிகளான இந்த நாட்டின் ஆசிரியர்களின் பணிகளாக இருப்பதோடு அவ்வாறான சமூகத்தை முன்னேற்றும்போது அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் தரமான கல்வியினை பாடசாலைகளினுள் நிறுவ வேண்டும். அதற்காக பாடசாலைச் சூழலினுள் உயர் தொழில் நிபுணத்துவத்தோடு பண்பான சந்ததியை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் அவ்வாறு செய்வது அரசின் பிரதான பொறுப்பாகும் .அவ்வாறெனில் தற்கால ஆசிரியர்களின் நிலை நவீனத்துவத்துக்கு பொருத்தமான வகையில் உயர்த்துவதற்கும் அதற்குச் சரிநிகராக வேதனம் மற்றும் ஏனைய வரப்பிரசாதப் பிரச்சினைகளுக்கும் மேலாக பெற்றுக் கொள்வதற்கு  முடியுமானவரை ஆசிரிய தொழிற்சங்க சபையை ஸ்தாபிப்பதற்காகச் செயற்பட வேண்டும் என்பதனை இந்த மாநாடு முன்மொழிந்து நிற்கிறது.

04) 1997 முதல் ஆசிரியர் மற்றும் அதிபர் சேவையில் மேலோங்கிய சம்பள முரண்பாட்டை அடியொற்றி அந்த முரண்பாட்டை நீக்கும் பொருட்டு இலங்கை ஆசிரியர்களோடு ஒன்றிணைந்த எமது சங்கம் தனியாகவும் சில வேளைகளில் கூட்டணியாகவும் 24 வருடங்களாக தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டோம். கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் போராட்டத்தின் பலத்தை உச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு எமது சங்கம் செய்த பாரிய அர்ப்பணிப்பும், பங்களிப்பும் காரணமாகும். அதன் பிரதிபலனாக வரம்பற்ற அதிகார பலம் கொண்ட தன்னிச்சையான ராஜபக்ஷ அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களின் கூட்டுப் பலத்தின் முன்னால் மண்டியிட்டது. சம்பள முரண்பாட்டில் 1/3 பகுதியை வெற்றிகொள்ள  முன்னேறியமை நாம் பெற்ற வரலாற்று வெற்றியாகும்.
அந்த வேதன முரண்பாட்டின் ஏனைய பகுதியை வென்றெடுக்க வேண்டிய போராட்டம் எமக்கு  முன்னால் உள்ளது. தற்கால சமூக பொருளாதார நிலையைகளினுள் அதற்கு ஈடான வகையில் புதிய வழிமுறைகள் மற்றும் போராட்ட வழிமுறைகளினுள் அந்த வெற்றிக்காக ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு அணிதிரள வேண்டும் என்று இந்த மாநாடு முன்மொழிந்து நிற்கிறது.

05)நாட்டின் தற்கால பொருளாதார நெருக்கடியினுள் ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் உணவுப் பிரச்சினை கல்விப் பிரச்சினை கற்றல் உபகரணங்களின் விலையேற்றம் காரணமாக கல்விக்கான வாய்ப்புக்கள் இல்லாது போகின்ற பிரச்சினைகள் காரணமாக பாடசாலைக் கல்வி வீழ்ச்சியடைந்து வருகிறது. பட்டினி, மந்தபோசணம், மன அழுத்தங்கள் ,விரக்தி ஆகிய நிலைமைகளினால் சகல பாடசாலைகளும் வரட்சியுற்று நிற்கின்றன. பொருளாதார நெருக்கடியால் பணவீக்கம் வறுமை என்பன தாங்கிக் கொள்ள முடியாத அளவு ஒட்டுமொத்த சமூகத்தையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்த நிலைமையின்கீழ் அரச ஊழியர்கள்
உட்பட வேதனம் பெறும் சகல தொழிலாளர்களும் தாங்கமுடியாத வாழ்க்கைச் சுமையோடு போராடிக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறே தாங்கிக் கொள்ள முடியாத பொருட்களின் விலைகளினால் அல்லலுறும் ஆசிரியர்கள் உட்பட சகல அரச ஊழியர்களுக்கும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு நிகராக  உடனடியாகக் கொடுப்பனவை வழங்குமாறு ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதோடு "பொருட்களின் செலவை தாங்க முடியாது வாழ்வதற்கு நிகரான கொடுப்பனவை உடனடியாக வழங்கு"என்ற போராட்டத் தலைப்போடு தொழிற்சங்க இணைப்பு மத்திய நிலையம் ஒன்றில் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது போராட்டம் மற்றும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதனையும் முன்மொழியும் இந்த மாநாடு பிள்ளைகளுக்கு மற்றும் பெற்றோருக்கு கல்விக்கு அவசியமான வசதி வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டமும் எமது போராட்டமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட வேண்டும் என்பதனையும் முன்மொழிந்து நிற்கிறது.

06)அதிக கடன் சுமை அரசிடம் டொலர் கையிருப்புத் தட்டுப்பாடுக்கு மத்தியில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பூசி மெழுகும் தீர்வாக  நிகழ்கால அரசாங்கமானது நாட்டின் தேசிய  வளங்களை கூறுபோட்டு விற்பனை செய்வதற்கு முனைப்புடன் நிற்கிறது. அரச நிர்வாகத்தின் செயற்திறனின்மை மற்றும் திறனற்ற முகாமைத்துவம் காரணமாக ஆதாயமற்ற நிறுவனங்களாக ஆக்கப்பட்ட மின், பெற்றோலியம், நீர் மற்றும் வேறு சில பிரதான நிறுவனங்கள் உட்பட தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு இதுவரை நாட்டைப் படுகுழிக்குள் தள்ளிய ஆட்டம் கண்ட ஆட்சியாளர்களுக்கூடாக தயாராக உள்ளது.தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராகவும் கறைபடிந்த மற்றும் மக்களுக்கு விரோதமான ஆட்சிக்கும் எதிராக எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு போராட்டம் செய்யும் அரச ஊழியர்களை அடக்கும் ஜனநாயக விரோதச் சட்டங்களைக் கொண்டு வருகின்ற மக்கள் ஆணையற்ற நிகழ்கால கறைபடிந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் அணிவகுக்க வேண்டும் என்பதையும் அரச சொத்துக்களை விற்பனை செய்தல் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் இந்த மாநாடு முன்மொழிந்து நிற்கிறது.

07)பாடசாலைக் கல்விக் கட்டமைப்புக்குள் தொடரும் பாரிய முரண்பாடுகளுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியவர்களான அரசியல் பித்தலாட்டக் காரர்கள் கல்வித்துறையின் மீது மேற்கொள்ளும் அரசியல் அழுத்தம் அரசியல் கைவிலங்குகளான அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளால் ஆசிரியர்களை ஓரிடத்தில் நிலைநிறுத்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்றன முறையாக நடைபெறுவதில்லை மாணவர்களின் கல்வித்தேவை மற்றும் ஆசிரியர்களின் தொழில் ஆற்றல்களின் அடிப்படையில்  ஆசிரிய இடமாற்றம் இடம்பெறவேண்டும் என்பதோடு இதில் அரசியல் வாதிகளின் தலையீடுகள் மற்றும் அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளால் ஆசிரியரை ஓரிடத்தில் நியமித்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு  அடிபணிய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. இது முறையற்ற செயற்பாடாக இருப்பதோடு ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பாதகத்தைத் தோற்றுவிக்கிறது.இந்த விடயத்தைக் கண்டு கொள்ளாது கடப்பதைவிட முறையான ஆசிரிய இடமாற்ற முறைகளை நிறுவிச் செயற்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் நியாயமான போராட்டமொன்றை நடத்த வேண்டும் என்பதனை இந்த மாநாடு முன்மொழிந்து நிற்கிறது.


08)பல வருடங்களாக போதிய அளவாக வழங்கப்படாத பரீட்சைக்கடமை மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டுக் கொடுப்பனவுகள் காரணமாக அங்கு அதி உன்னத பொறுப்புகளுடன் கூடிய பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற குறைந்த அளவான கொடுப்பனவு அவர்கள் செய்கின்ற பணியின் பெறுமதிக்கு ஒருபோதும் பொருத்தமானதல்ல .இதுவரை ஆசிரியர்கள் முகங்கொடுத்துள்ள பொருளாதாரச் சுமைகருதி இந்தக் கொடுப்பனவைப் போதுமானவரை அதிகரிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்மொழியும் இந்த மாநாடு அதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும்  போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

09)பாடசாலைக் கல்விக்  கட்டமைப்பிற்குள் நிகழும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுதந்திரம் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் பல்வேறு செயற்றிட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் கல்விச் சுதந்திரத்திற்குஅதிகாரிகளால்  எல்லை நிர்ணயம் செய்யப்பட்ள்ளது.இந்தப் பயனற்ற வேலைத்திட்டத்துக்கூடாக செயற்றிட்ட அடிமைத்தனத்துக்குள் இட்டுச்சென்றுள்ளது.கல்விச் சுதந்திரத்தை வேரோடு பிடுங்கி எறிகின்ற இவ்வாறான பயனற்ற வேலைகளை நிராகரிக்க வேண்டும் என்பதோடு மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கல்விச் சுதந்திரத்தைப் பறிக்கும் இவ்வாறான பயனற்ற செயற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்களை நீக்குமாறு கோரி அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதோடு அதற்காக சகல ஆசிரியர்களையும் ஒன்றிணைக்க வேண்டுமென்று இந்த மாநாடு முன்மொழிந்து நிற்கிறது.

10)தெற்காசியாவிலேயே தற்போதுள்ள  கூட்டுறவுச் சங்கங்களுள் மிகப்பெரிய சங்கமாகிய கல்விக் கூட்டுறவுச் சங்கத்தில் தற்போதுள்ள அங்கத்தவர்களுள் இரண்டு லெச்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இது மிகவும் சாத்தியமான முறையில் உறுப்பினர்களிடம் இருந்து அறவிடப்படும் நிதியில் நிறுவப்பட்டு இயங்குகிறது.அவ்வாறே ஒவ்வொரு முறையும் மாறும் அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அகப்படும் இந்தச் சங்கத்தின் முகாமையாளர்களால் ஊழல் நிறைந்த நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது.இறுதியாக இந்தச் சங்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றிய மொட்டு ஆசிரிய சங்கமானது தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலினுள் இதனைக் கொண்டுசென்றதோடு இதற்குப் பாரிய அழிவையும் செய்துள்ளது.அவர்கள் சங்கத்தினுள் அநீதியானதும் தன்னிச்சையானதுமான செயற்பாடுகளை முன்னெடுத்ததன் விளைவாக இன்றுவரை தங்கள் அங்கத்துவர்களுக்கு சங்கம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அதனுள் உறுப்பினர்களிடமிருந்து அறவிடப்படும் நிதி உட்பட சொத்துக்களும் உள்ளடங்குகின்றன.கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் இவ்வாறான செயற்பாட்டை உடனடியாக மாற்றியமைத்து மீண்டும் அங்கத்தவர்களின் சக்தி மற்றும் நம்பிக்கையுடன் நிறுவி மேம்படுத்த வேண்டும் என்பதனை முன்மொழிந்து நிற்கும் இந்தத் தேசிய மாநாடு அதற்காக அங்கத்தவர்களுள் பெரும்பான்மையினராகவுள்ள சகல ஆசிரியர்களினதும் பலத்தை ஒருங்கிணைத்த போராட்டம் மற்றும் நீதியான செயற்பாடுகளுக்கு அவதாரம் எடுக்க வேண்டும் என்பதனை எடுத்துரைக்கிறோம்.அதற்காக சகல அங்கத்துவ ஆசிரியர்கள் உட்பட கல்வி ஊழியர்களும் இலங்கை ஆசிரிய சேவை சங்கய்தைச் சூழ  நம்பிக்கையோடு ஒன்றிணைய வேண்டும் என்பதனை முன்மொழிந்து நிற்கின்றோம்.








No comments: