News Just In

10/21/2022 05:00:00 PM

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று!




22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளதுடன், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எவ்வாறாயினும் தேவையற்ற திருத்தங்களைச் சேர்க்கும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சட்டமூலம் தொடர்பான இறுதிக் கருத்தினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று அறிவிக்கும் என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: