News Just In

9/01/2022 08:33:00 PM

நாளைய மின்வெட்டு விபரம் வெளியீடு..!

நாட்டில் நாளைய (02) தினம் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 8.20 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.


No comments: