News Just In

9/06/2022 06:14:00 AM

மீராவோடை வாராந்த சந்தை தொடர்பான அறிவித்தல்!

மீராவோடை மீரா ஜும்ஆப்பள்ளி வாயலினால் நடாத்தப்பட்டு வந்த வாராந்த சந்தையானது கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையின் முறையான அனுமதியுடன் மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அருகாமையில் எதிர்வரும் புதன்கிழமை (2022.09.07) முதல் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினர் பொது அறிவித்தல் செய்துள்ளனர்.

அனைத்து வியாபாரிகளும் குறித்த தினத்தில் தங்களது வியாபாரப் பொருட்களுடன் மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலுக்கு அருகாமையில் வருகை தருமாறும் அத்துடன் சகல பொது மக்களும் பொருள் கொள்வனவிற்காக வருகை தருமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்ற அறிவித்தல் மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது.


No comments: