News Just In

9/05/2022 10:27:00 AM

வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளி ஏற்பாடு செய்த தமிழ் மொழி விழா 2022!



வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளி ஏற்பாடு செய்த தமிழ் மொழி விழா 2022 வெகுவிமர்சையாக வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
முன்பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், முன்பள்ளி தவிசாளர் ஏ.என்.எம்.றிழாவினால் 'தமிழ் குழந்தை இலக்கியமும் முன்பள்ளிக் கல்வியில் அதன் வகிபாகமும்' எனும் தலைப்பில் கருப்பொருள் உரையாற்றப்பட்டது.

'மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்' எனும் மகுட வாசகத்தை தாங்கி நின்ற இவ்விழாவின் போது, தமிழ் சிறுவர் இலக்கியங்களான தமிழ் சிறுவர் நாட்டார் பாடல்கள், தமிழ் சிறுவர் சித்திரக் கதைகள், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், விடுகதைகள், சிறுவர் அறிவியல் பத்திகள் ஆகிய தலைப்புகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்பள்ளி மாணவர்கள் மேடையேற்றினர்.

சக்ஸஷ் முன்பள்ளி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மபாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.றிஸ்வி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர் எம்.என்.எப்.முப்லிஹா, மட்டக்களப்பு மத்தி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.ஜாபிர் கரீம், கல்குடா கல்வி வலய முறைசாரா கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சீ.லோகேஸ்வரி, மட்டக்களப்பு மத்தி வலய தமிழ் மொழி ஆசிரிய ஆலோசகர் எச்.எம்.ஆதம்லெப்பை, வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலய அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ், வாழைச்சேனை ஹைராத் வித்தியாலய அதிபர் யூ.எல்.அகமட், வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபை வண. கே.எஸ்.நிஷாந்தன், ஓட்டமாவடி சிறாஜிய்யா அரபுக் கல்லூரி கல்விப் பிரிவு பிரதி அதிபர் மௌலவி. ஜே.அஸ்வர் நஹ்ஜி, கோறளைப்பற்று மத்தி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எப்.எப்.முஜிபா, எழுத்தாளர்களான தமிழூராள் அனுஷ்திக்கா, கவிமணி கவி நுட்பம் பாயிஷா நௌபல், உதயகுமார் ரெமிலா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழா திறம்பட உழைத்த முன்பள்ளி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மபாஸ், தலைமை ஆசிரியர் தர்ஷினி ஸ்ரீகாந்த், ஆசிரியர்களான என்.ஜே.நஸ்மிலா, எம்.பி.பிர்தௌசியா, ஆர்.ஸ்ரீதிவாஜினி, எச்.எம்.எப்.சாஜிதா ஆகியோர் முன்பள்ளி தவிசாளரினால் பாராட்டப்பட்டனர்.

தமிழ் மொழி விழாவில் திறமையை வெளிப்படுத்திய 51 யூ.கே.ஜி மாணவர்களுக்கு இதன்போது அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மறந்துபோயுள்ள சிறுவர் இலக்கியத்திற்கு புத்துயிரளிக்கும் வகையில் 40க்கு மேற்பட்ட நூல்கள் மேடையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்த விசேட அம்சமாகும்.

Murshid Valaichenai

No comments: