News Just In

9/11/2022 06:08:00 PM

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156வது பொலிஸ் தினத்தினை முன்னிட்டு மாபெரும் நடமாடும் சேவை!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இறக்காமம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகம், பிரதேச வைத்தியசாலை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை என்பவற்றின் பங்கேற்புடன் நடமாடும் சேவை வாங்காமம் அரசினர் முஸ்லிம் கலவன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விற்கு, பிரதம அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்ட்ர் ஐ.எல்.எம். றிபாஸ், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர், கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ. நபீல், பிரதேச வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் அஜித் ரட்னாயக்க, ஆயுர்வேத வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.பி.எம். நிஜாமுடீன், ஆயுர்வேத சமுதாய வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம். நக்பர் , முன்னாள் கிழக்கு மாகாண போக்குவரத்து முகாமையாளர் எம்.என்.எம். நஸீர், கல்லூரி அதிபர் ஏ. ஹாறுடீன் தொழிலதிபர் ஏ.மர்சூக், விவசாய நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எல். பஹ்மி அஹமட், கிராம உத்தியோகத்தர் எஸ்.எல். ஹம்சா, யூ.எல். ஆஹிர், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். யாகூப் மற்றும் கிராம மட்டத் தலைவர்கள் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நடமாடும் சேவையில் பொலிஸ் நற்சான்றிதழ்கள், குடும்ப பிணக்குகள் மற்றும் சிறு குற்றங்கள் தொடர்பான விசாரணை, தேசிய அடையாள அட்டை தொடர்பான விசாரணைகள், ஆயுர்வேத, ஆங்கில மருத்துவ சேவைகள், பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் சேவைகள், சமுர்த்தி தொடர்பான முறைப்பாடுகள் என பல்வேறு சேவைகளும் ஆலோசனைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

நூருல் ஹுதா உமர்







No comments: